மியூச்சுவல் ஃபண்டுகளில் தாமத முதலீட்டால் ஏற்படும் இழப்பு/கூட்டுவட்டியின் தாக்கம்

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நீண்ட காலத்திற்கு நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது, உங்களுக்குக் கிடைக்கும் ரிட்டர்ன் கூட்டுவட்டியின் விளைவால் பெரிய அளவில் இருக்கும். எனினும், முதலீடுகளை ஒரு சில ஆண்டுகள் தள்ளிப்போட்டால், அதேபோல் பெரிய அளவிலான லாபத்தை நீங்கள் இழக்க நேரிடும். இந்தக் கூட்டு வட்டியின் விளைவின் காரணமாக, நீங்கள் எவ்வளவு சேமித்திருக்க முடியும் என்ற தொகைக்கும், சில ஆண்டுகள் தாமதமாக முதலீடு செய்யத் தொடங்கினால் உண்மையில் எவ்வளவு சேமிப்பீர்கள் என்ற தொகைக்கும் உள்ள வித்தியாசம் மிகப் பெரியதாக இருக்கும். இதை இன்னும் நன்கு புரிந்துகொள்ள mutualfundssahihai.com/ta/what-age-should-one-start-investing எனும் பக்கத்தைப் பாருங்கள்.

கூட்டு வட்டியின் விளைவானது நீண்ட கால அளவில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்யும்போது மிகப்பெரிய பலனைக் கொடுக்கும். எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் பணம் அதிகமாகப் பெருகும். கூட்டுவட்டியின் சக்தி என்பது உருப்பெருக்கும் கண்ணாடியைப் போன்றது. காலம் அதிகரிக்க ,அதிகரிக்க இதன் பெருக்கத் திறன் அதிகரிக்கும். முதலீடு செய்யத் தாமதித்தால், SIP மூலம் முதலீடு செய்தாலும், லம்ப்சம் முறையில் செய்தாலும், முதலீடு செய்யும் தொகையை அதிகப்படுத்தினாலும் கூட, உங்களை விட ஐந்து வருடங்கள் முன்பே முதலீடு செய்தவர்கள் பெறும் லாபத்தை நீங்கள் அடைய முடியாது. SIP முதலீடுகளாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் முதலீடு செய்யும் தொகையில் அவர்கள் பாதியை முதலீடு செய்திருந்தாலும், அவர்களைவிட நீங்கள் பின்தங்கியே இருப்பீர்கள். லம்ப்சம் முதலீடு செய்தாலும், சில வருடங்கள் தாமதித்தால் நீங்கள் மொத்தமாக சேர்த்திருக்கும் தொகையானது, உங்களுக்கு சில வருடங்களுக்கு முன்பே முதலீடு செய்யத் தொடங்கியவர்களைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும். முதலீடு செய்வது குறித்து முடிவெடுப்பதில் தாமதம் காட்டுவதற்குக் கொடுக்கும் இந்த விலை மிகவும் அதிகமாகும்.

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யத் தொடங்கினால், முதலீடு செய்யும் தொகை குறைவாகவே இருந்தாலும் கூட, நீங்கள் சுமார் பத்து வருடங்கள் தாமதமாகத் தொடங்கி அதிகத் தொகையை முதலீடு செய்யத் தொடங்கினாலும், அதில் கிடைக்கும் தொகையை விட அதிகத் தொகையைச் சேமித்திருப்பீர்கள். முயலும் ஆமையும் பந்தயம் சென்ற கதை போலத்தான். தாமதமாகத் தொடங்கி அதிக தொகைகளை முதலீடு செய்யத் தயாராக இருந்தாலும், முன்கூட்டியே தொடங்கி குறைவாகவும் தொடர்ச்சியாகவும் முதலீடு செய்வது, உங்கள் இலக்கை எளிதில் அடைய உதவும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்