முதலீட்டாளர் ரிஸ்க் புரொஃபைல் மற்றும் பொருத்தமான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்

முதலீட்டாளர் ரிஸ்க் புரொஃபைல் மற்றும் அதற்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள் zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

முதலீடு என்று வரும்போது, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிதி தொடர்பான லட்சியங்களும் ரிஸ்க் எடுக்கும் தன்மையும் இருக்கும். நீங்கள் தேர்வுசெய்யும் முதலீடுகள் உங்களின் நீண்டகால மற்றும் குறுகியகால லட்சியங்களைப் பொறுத்தே இருக்கும். உங்கள் முதலீட்டு விருப்பங்களும் அணுமுறையும் இவற்றின் அடிப்படையில்தான் அமையும். உங்களுக்கு ஏற்ற ஸ்கீமைக் கண்டறிவதற்கு ரிஸ்க்-ஓ-மீட்டர் உங்களுக்கு ஒரு கருவியாக இருக்கும்.

புதிய ரிஸ்க்-ஓ-மீட்டரைப் புரிந்துகொள்ளுதல்

ரிஸ்க்-ஓ-மீட்டரின் தனிச்சிறப்பு அதன் ரிஸ்க் கிரேடிங் அணுகுமுறையில் அடங்கியுள்ளது. முந்தைய ரிஸ்க்-ஓ-மீட்டர் ஃபண்ட் வகைகளை வேறுபட்ட ரிஸ்க் கிரேடுகளுடன் தொடர்புபடுத்தி வந்தது. ஆனால் புதிய ரிஸ்க்-ஓ-மீட்டர் அந்த ஃபண்டில் உள்ள குறிப்பிட்ட சொத்துகளையும் கணக்கில் எடுத்துகொண்டு ரிஸ்க் மதிப்பீடுகளை வழங்குகிறது. அதாவது, குறிப்பிட்ட ஃபண்ட் ஸ்கீமிற்கு ஒதுக்கப்படும் ரிஸ்க் கிரேடானது, ஸ்கீமின் கீழ் வருகின்ற சொத்துகள், அதன் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பிடப்படும். இதனால் ரிஸ்க் மதிப்பீடு நிதர்சனத்தை ஒட்டி இருக்கும். ஏனெனில், ஃபண்டிற்குச் சொந்தமான சொத்துகளுக்குத் தொடர்புடைய உண்மையான ரிஸ்க்குகளைக் கருத்தில் எடுத்துக்கொள்வதே இதற்குக் காரணம்.

ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமைத் தேர்ந்தெடுத்தல்

உங்கள் முதலீட்டு லட்சியங்கள், ரிஸ்க் எடுக்கும் தன்மை, கால அளவு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களுக்கு ஏற்ற முதலீடுகளை ரிஸ்க்-ஓ-மீட்டர் வழங்கும் ரீடிங் உங்களுக்குத் தெளிவாகப் பரிந்துரைக்கும்.

உதாரணமாக, முதலீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் குறுகியகால அடிப்படையில் குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஓவர்நைட் அண்ட் ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்ஸ் போன்ற குறைவான-ரிஸ்க் உள்ள மியூச்சுவல் ஃபண்ட்கள்.

இன்னொரு பக்கம், முதலீட்டிற்கு ரிஸ்க் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் அதிக லாபத்தைப் பெற வேண்டும் என்று விரும்புகின்ற முதலீட்டாளர்கள் ‘மிக அதிக’ ரிஸ்க் வகையின்கீழ் வரும் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் தகவலுக்கு, இடதுபுறத்தில் வழங்கியுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

இருந்தாலும், இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது ரிஸ்க் வகையின் அடிப்படையில் முதலீட்டைத் தேர்வுசெய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல. மாறாக, ஒவ்வொரு வகையின் கீழ் உள்ள குறிப்பிட்ட ஸ்கீம்களை நன்கு ஆராய்ந்து கவனமாக மதிப்பிட வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கவனத்திற்கு: ஒரே ரிஸ்க் வகையின் கீழ் வரும் அனைத்து ஃபண்ட்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொன்றும் தனித்துவமான உத்திகள், ஹோல்டிங்குகள், லாபத்திற்கான சாத்தியங்கள ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதனால், மிகத் தெளிவாக ஆராய்ந்து உங்கள் நிதி தொடர்பான லட்சியங்களுக்கும் ரிஸ்க்கைத் தாங்கும் தன்மைக்கும் சிறந்த முறையில் ஒத்துப்போகின்ற முதலீட்டு ஸ்கீமைத்` தேர்வுசெய்யுமாறு பரிந்துரைக்கிறோம். உதவி தேவைப்பட்டால் தயங்காமல் ஒரு நிதி நிபுணரைத் தொடர்புகொள்ளவும்.

Disclaimer

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்