மியூச்சுவல் ஃபண்டுகளில் டிரெய்லிங் மற்றும் ரோலிங் ரிட்டர்ன்கள் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்களில் ட்ரெயிலிங் மற்றும் ரோலிங் ரிட்டர்ன்கள் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்கள் அவற்றின் ரிட்டர்ன்கள் அல்லது செயல்திறனின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன, மியூச்சுவல் ஃபண்ட்களை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கியமான செயல்திறன் அளவீடுகள்:

(a) ட்ரெயிலிங் ரிட்டர்ன்கள்
(b) ரோலிங் ரிட்டர்ன்கள்

ஆகவே, மியூச்சுவல் ஃபண்ட்களில் ரிட்டர்ன்களைக் கணக்கிட மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டு முறைகளின் கருத்தாக்கங்களை இப்போது புரிந்துகொள்ளலாம். ஸ்கீமின் உரிய பெஞ்ச்மார்க்குடன் ஒப்பிட்டு இப்படிக் கணக்கிடப்படும் ஸ்கீம் ரிட்டர்ன்கள், ஸ்கீமின் அதிக செயல்திறன் அல்லது குறைவான செயல்திறனைப் பிரதிபலிக்கும்.

ட்ரெயிலிங் ரிட்டர்ன்கள்:
ட்ரெயிலிங் ரிட்டர்ன்கள் என்பது, மியூச்சுவல் ஃபண்ட்களில் ஒரு ஃபண்ட் குறிப்பிட்ட இரண்டு தேதிகளில் எப்படிச் செயல்பட்டுள்ளது என்பதை அளவிடுவதற்கான வழியாகும். ட்ரெயிலிங் ரிட்டர்ன்கள் பொதுவாக “பாயிண்ட்-டு-பாயிண்ட்” ரிட்டர்ன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ஃபண்டின் செயல்திறன் பற்றிய சுருக்கமான மேலோட்டப் பார்வையை இவை வழங்குகின்றன. வருடா வருடம் (YTD), ஒரு வருடம், மூன்று வருடங்கள், அதற்கும் மேற்பட்ட கால வரம்புகள் போன்ற வெவ்வேறு கால கட்டங்களுக்கு இவற்றைக் கணக்கிட முடியும். ஃபண்டின் தொடக்கத் தேதியில் இருந்து இன்று வரையான மதிப்பையும் கணக்கிட முடியும்.  

ரோலிங் ரிட்டர்ன்கள்:
சில சமயம் “ரோலிங் பீரியட் ரிட்டர்ன்கள்” அல்லது “ரோலிங் டைம் பீரியட்ஸ்” என்றும் அழைக்கப்படுகின்ற ரோலிங் ரிட்டர்ன்கள், கொடுக்கப்பட்ட ஒரு கால வரம்பிற்குக் கணக்கிடப்பட்ட வருடாந்திரமாக்கப்பட்ட சராசரி ரிட்டர்ன்களைக் குறிக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட்கள் காலப்போக்கில் எப்படிச் செயல்படுகின்றன என்பதை மதிப்பீடு செய்வதற்கான முக்கியமான வழிகளை இவை வழங்குகின்றன. இது முதலீட்டாளர்களின் ஹோல்டிங் காலகட்டத்தின் உண்மையான அனுபவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். ஒரு போர்ட்ஃபோலியோ அல்லது ஃபண்டின் ரோலிங் ரிட்டர்ன்களை மதிப்பீடு செய்வது, அதன் கடந்த காலத்தில் வெவ்வேறு கால இடைவேளைகளில் அதன் செயல்திறன் எப்படி இருந்துள்ளது என்ற ஒரு சீரான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

மியூச்சுவல் ஃபண்ட்களின் ரோலிங் ரிட்டர்ன்களைக் கணக்கிட, பல்வேறு கால அளவுகளுக்கு (உதாரணமாக, தினசரி, வாரந்தோறும் அல்லது மாதந்தோறும்) ஃபண்டின் செயல்திறனை நீங்கள் பகுப்பாய்வு செய்து, இந்த ஒவ்வொரு காலகட்டத்திற்குமான சராசரியாக்கப்பட்ட வருடாந்திர ரிட்டர்ன்களைக் கணக்கிடுவீர்கள். 

இறுதியாக, ட்ரெயிலிங் ரிட்டர்ன்கள், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு ஃபண்டின் கடந்தகால செயல்திறனை அளவிடுகின்றன, ரோலிங் ரிட்டர்ன்கள் ஒன்றின் மேல் ஒன்று பொருந்தும் பல்வேறு கால வரம்புகளில் இன்னும் நிகழ்நேரப் பார்வையை வழங்குகின்றன. ஒரு மியூச்சுவல் ஃபண்டின் எதிர்கால ரிட்டர்ன்களுக்கு ஒரு ஃபண்டின் சீரான தன்மை மற்றும் சாத்தியக்கூறு ஆகியவற்றை மதிப்பீடு செய்ய இந்த அளவீடுகள் முதலீட்டாளர்களுக்கு உதவுகின்றன.

பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.
 

285
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்