நிதி இலக்குகளை அடைய பாதுகாப்பான முதலீடுகள் போதுமானதாக இருக்காதா?

நிதி இலக்குகளை அடைவதற்கு பாதுகாப்பான முதலீடுகள் போதாதா? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

காலப்போக்கில் பல்வேறு நிதி இலக்குகளுக்கான வழக்கமான செலவுகள் அதிகரிக்கும் என்பதை ஒருவர் நினைவில்கொள்ள வேண்டும். பணவீக்கம் 6% இருக்கின்ற பட்சத்தில், ஒரு இலக்கின் செலவும் சுமார் 12 வருடங்களில் இரண்டு மடங்காகிடும். எனினும், ஒருவேளை பணவீக்க விகிதம் 7% இருகின்ற பட்சத்தில், இந்த இரட்டிப்பு சுமார் பத்து வருடங்களிலேயே ஏற்படும்.

பணவீக்க விகிதம் 7% இருக்கும் போது, உங்கள் அசல் தொகையின் மொத்தப் பாதுகாப்பை எதிர்நோக்கி, பணவீக்கத்துடன் மிக நெருக்கமான ரிட்டர்ன்களை கொடுக்கின்ற துறைகளில் நீங்கள் முதலீடு செய்வீர்கள். முதலீட்டு ரிட்டர்ன்களின் மீதான வரிகளைக் கழித்துவிட்டு, மீதமுள்ள ரிட்டர்ன்களை பார்க்கும் போது, அவை பணவீக்கத்தை விடக் குறைவாகவே இருக்கும்.

சில எளிமையான கணக்கீட்டை நாம் இப்போது பார்க்கலாம்:

பணவீக்கத்தின் மதிப்பு வருடத்திற்கு 7% மற்றும் நீங்கள் ரூ. 100 மதிப்புக்கு இப்போது ஒன்றை வாங்குகிறீர்கள், அடுத்த வருடம் அதனை வாங்குவதற்கு உங்களுக்கு ரூ. 107 தேவைப்படும். இன்னும் ஒரு வருடம் கழித்து, அதே பொருளின் மதிப்பு ரூ. 114.49. இது பணவீக்கம் ஒரே நிலையில் இருக்கின்ற பட்சத்தில் மட்டுமே பொருந்தும்.

அதேசமயத்தில், உங்கள் வரிப்பிடித்தங்கள் போக வருடத்திற்கு 6% வட்டி வழங்கிடும் மிகவும் பாதுகாப்பான பகுதியில் நீங்கள் உங்கள் பணத்தைச் சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது இந்த ரூ. 100 ஆனது ரூ. 106 ஆகிடும். இது மேலே குறிப்பிட்டுள்ள தொகையை விட ரூ. 1 குறைவானது. இரண்டு வருடங்கள் கழித்து, அந்தத் தொகையானது ரூ. 112.36 ஆகும். இதுவும் வாங்கப்பட வேண்டிய பொருளின் மதிப்பை விடக் குறைவானது. இடது பக்கத்தில் உள்ள அட்டவணை, முதலீடுகளின் தோராயமான மதிப்புகள், இலக்குகளின் செலவுகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பின்னர் அவற்றுக்கு இடையேயான இடைவெளிகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.

எனவே, வெறுமனே சேமிப்பது மட்டுமின்றி முதலீடு செய்வதும் முக்கியமானது.

348
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்