லார்ஜ் கேப் மற்றும் புளூ-சிப் ஃபண்டுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

லார்ஜ் கேப் ஃபண்ட்களுக்கும் புளூச்சிப் ஃபண்ட்களுக்கும் என்ன வேறுபாடு?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்கள், அவற்றின் பெர்ஃபார்மன்ஸ், NAVகள், ரேங்கிங் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைப் பார்க்கும்போது RST, புளூச்சிப் ஃபண்ட், XYZ லார்ஜ் கேப் ஃபண்ட் போன்ற பெயர்களை அவ்வப்போது பார்த்திருப்பீர்கள். 'புளூச்சிப்', 'லார்ஜ் கேப் ஃபண்ட்' ஆகிய பெயர்கள் அவ்வப்போது மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்படும். ஏனெனில் இரண்டுமே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ள லார்ஜ் கேப் நிறுவனங்களின் ஸ்டாக்குகளில் முதலீடு செய்கின்ற ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களைக் குறிக்கின்றன. 

நீங்கள் அக்டோபர் 2017-இல் வெளியிடப்பட்டு ஜூன் 2018-இல் அமலுக்கு வந்த SEBI-இன் தயாரிப்பு வகைப்படுத்தல் சுற்றறிக்கையைப் பார்த்தால், ஈக்விட்டி ஃபண்ட் வகையின் கீழ் புளூச்சிப் ஃபண்ட்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்காது. அப்படியானால் புளூச்சிப் ஃபண்ட்கள் எதுவும் இப்போது இல்லையா? அப்படியல்ல, பெயர் எதுவாக இருந்தாலும், மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனைப் பொறுத்தவரை, பட்டியலிடப்பட்டுள்ள முதன்மையான 100 நிறுவனங்களில் ஃபண்ட் முதலீடு செய்தால், அது லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட் என்று வகைப்படுத்தப்படும். 

இந்தியாவின் பல்வேறு எக்ஸ்சேஞ்களில் பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. லார்ஜ் கேப் என்பது, இந்தியாவில் முழு மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் = பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் எண்ணிக்கை * ஒரு பங்கின் விலை) பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ள முதன்மையான 100 நிறுவனங்களையே குறிக்கிறது. 

புளூச்சிப் ஸ்டாக்குகள் என்பது, பெரும்பாலும் பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ள, ஒரு பொருளாதாரத்தின் மிகப் பெரிய நிறுவனங்களின் ஸ்டாக்குகளைக் குறிக்கிறது. லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள் அவற்றின் அசெட்டுகளில் 80%-ஐ அத்தகைய புளூச்சிப் ஸ்டாக்குகளில் முதலீடு செய்யும். ஆகவே, சில AMCகள் தங்கள் லார்ஜ் கேப் ஃபண்ட்களை புளூச்சிப் மியூச்சுவல் ஃபண்ட்கள் எனப் பெயரிட்டு அழைத்துக்கொள்ளும். 

அடுத்த முறை நீங்கள் நிலையான ரிட்டர்ன் சாத்தியத்துடன் கூடிய, நன்கு டைவர்சிஃபை செய்யப்பட்ட ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பும்போது, அவற்றின் பெயர்களை வைத்துக் குழம்பிவிட வேண்டாம். அவை எந்த வகையின்கீழ் வரும் என்பதையும், அவை லார்ஜ் கேப் ஃபண்ட்கள் என வகைப்படுத்தப்படுகின்றனவா என்றும் பாருங்கள். அந்த நிலையில் தான் ஒரு ஃபண்டை இறுதியாகத் தேர்வு செய்யும் முன்பு ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கும் செயல்முறையின் அடுத்த படியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
 

345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்