ஒரு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் மூடப்பட்டால் / விற்கப்பட்டால் என்ன ஆகும்?

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட்டாலோ/ விற்கப்பட்டாலோ என்ன நடக்கும்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட்டால் அல்லது விற்கப்பட்டால், எந்தவொரு நடப்பு முதலீட்டாளருக்கும் அது ஒரு கவலைதரும் விஷயமாகவே இருக்கும். இருந்தாலும், மியூச்சுவல் ஃபண்ட்கள் SEBI -யால் ஒழுங்குபடுத்தப்படுவதால், இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு பரிந்துரைக்கப்பட்ட செயல்முறையாகவே இருக்கும்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட்டால், மூடப்படுவதற்கான கோரிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஃபண்டின் அறங்காவலர் குழு SEBI -ஐ அணுகவேண்டும் அல்லது SEBI -யே ஒரு ஃபண்டை மூடுவதற்கு வழிகாட்டலாம். இதுபோன்ற சமயங்களில், மூடப்படுவதற்கு முன்பு கடைசியாக இருக்கக் கூடிய நிகர சொத்து மதிப்பின் அடிப்படையில் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் தொகையானது திரும்ப வழங்கப்படும்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கிவிட்டால், இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று, புதிய ஃபண்ட் ஹவுஸின் மேற்பார்வையின் பேரில் திட்டங்கள் அவற்றின் அசல் வடிவத்தில் தொடரப்படும். அல்லது, பெறப்பட்ட திட்டங்கள் புதிய ஃபண்ட் ஹவுஸிலுள்ள திட்டங்களுடன் ஒன்றிணைக்கப்படும். சொத்து மேலாண்மை நிறுவனத்தின் (AMC) அனைத்து ஒருங்கிணைப்புகளுக்கும் மற்றும் கையகப்படுத்தலுக்கும் மற்றும் திட்ட நிலையிலான ஒருங்கிணைப்புகளுக்கும் SEBI -யின் ஒப்புதல் தேவை.

இதுபோன்ற எல்லா சூழ்நிலைகளிலும், வெளியேற்றக் கட்டணங்கள் ஏதும் இன்றி திட்டங்களை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். முதலீட்டாளர் அல்லது ஃபண்ட் ஹவுஸின் மூலமான எந்தவொரு நடவடிக்கையும் நடப்பிலுள்ள நிகர மதிப்பின் பேரில் செய்யப்படும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்