மியூச்சுவல் ஃபண்டுகள் பாஸ் புக்கை வழங்குமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்தால் எனக்கு கணக்குப் புத்தகம் வழங்கப்படுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

வங்கிகளும், குறிப்பிட்ட சில சிறு சேமிப்புத் திட்டங்களும் கணக்குப் புத்தகத்தை வழங்குவதைப் போன்று, மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்தால் கணக்குப் புத்தகம் ஏதும் வழங்கப்படாது. ஆனால், அதற்குப் பதில் கணக்கு அறிக்கை வழங்கப்படும். ஒரு கணக்குப் புத்தகத்தின் முக்கிய நோக்கம், டெபாசிட்கள், பணமெடுத்தல்கள், வட்டி வரவு போன்ற வங்கியுடனான அனைத்துப் பரிவத்தனைகளையும் தடமறிவதே. மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும், இதேபோன்று பின்வரும் பரிவர்த்தனைகள் இருக்கும்: பர்சேஸ் (வாங்கல்), ரிடம்ஷன்கள் (மீட்டல்), ஸ்விட்ச்கள் (மாற்றம்), டிவிடென்ட்டின் மறுமுதலீடு போன்றவை. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இதுபோன்ற பரிவர்த்தனைகள் கணக்கு அறிக்கையில் பதிவு செய்யப்படுகின்றன.

ஒரு திட்டத்தில் முதல் முதலீட்டைச் செய்த பின்னர் கணக்கு அறிக்கையானது வழங்கப்படும். கணக்கு அறிக்கையில் பின்வரும் அனைத்து தொடர்புடைய தகவலும் இருக்கும்: முதலீட்டாளரின் பெயர், முகவரி, கூட்டு முதலீட்டின் விவரங்கள், முதலீட்டுத் தொகை, NAV விவரங்கள், ஒதுக்கப்பட்ட யூனிட்கள் போன்றவை. ஒவ்வொரு முறை புதிய பரிவர்த்தனை செய்யப்படும்போதும், கணக்கு அறிக்கையில் அத்தகவல்கள் சேர்க்கப்பட்டு, அதன் ஒரு நகல் முதலீட்டாளருக்கு அனுப்பப்படும். இந்த டிஜிட்டல் யுகத்தில், பல முதலீட்டாளர்கள் மின்னணு அறிக்கைகளையே தேர்வு செய்கின்றன. இது தகவலை வாசிப்பதற்கும், அணுகுவதற்கும் மற்றும் சேமிப்பதற்கும் எளிதான வழியாக இருக்கும்.

சொத்து மேலாண்மை நிறுவனத்தையோ (AMC) அல்லது அதன் முதலீட்டாளர்களையோ தொடர்பு கொள்வதன் மூலம், எந்த சமயத்திலும் ஒரு டூப்ளிகேட்(நகல்) கணக்கு அறிக்கையை முதலீட்டாளர்கள் பெற முடியும். இவ்வாறு, திட்டத்தின் கணக்கு அறிக்கை, ஒரு கணக்குப் புத்தகம் போன்று செயல்படுகிறது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்