பணத்தை அப்படியே விட வேண்டாம். அவற்றை வளர விடுங்கள்!

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

வெவ்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், வெவ்வேறு வகையான ரிட்டர்ன்களை வழங்கிடுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் எதனால் முதலீடு செய்யவேண்டும்? பல மியூச்சுவல் ஃபண்ட்களின் மோசமான செயல்திறன் குறித்து நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். மேலும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எந்த உத்தரவாதத்தையும் வழங்குவதில்லை. இந்தக் கட்டுப்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது, மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதை ஒருவர் கருதுவதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? அவை எப்போதும் ஒழுங்காகச் செயல்படுமா?”

நடப்பில் உள்ள மற்றும் வாய்ப்புள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் அனைவரும் இதே கேள்வியைப் பலவிதங்களில் கேட்பதுண்டு.

பெரும்பாலும் கேள்வி ஒன்றாக இருந்தாலும், அது கேட்கப்படுவதற்கான காரணம் மற்றும் அதனைக் கேட்கும் நபர் மாறுபடுகிறார்.

ஒரு சூழலில், தான் செய்த முதலீடானது எதிர்பார்த்த அளவிலான ரிட்டர்ன்களை வழங்கவில்லை என்று முதலீட்டாளர் நினைத்தார். எனினும், அது குறித்து பல கேள்விகளை எழுப்பிய பின்னர், முதலீட்டாளர் இரண்டு மாறுபட்ட திட்டங்களை ஒப்பிடுவது தெரியவந்தது. இது ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒப்பிடுவதைப் போன்றது - இது சரியான அணுகுமுறையும் இல்லை.

இன்னொரு சூழலில், முதலீட்டாளர் ஒரு திட்டத்தில் முதலீடு செய்துள்ளார். அந்த சமயத்தில் ஒட்டுமொத்தச் சந்தையும் இறங்கு முகமாக இருந்துள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கும் போது, எந்தவொரு சிறந்த டிரைவராக இருந்தாலும் அல்லது சிறந்த காராக இருந்தாலும், அந்த சமயத்தில் வேகமாகச் செல்ல முடியாது. ஒட்டுமொத்த சந்தையும் சரியாக இல்லாத போதும், இதே நிலைமைதான் ஏற்படும். இதுபோன்ற சூழலும் போக்குவரத்து நெரிசலை போன்றுதான், அந்த நெரிசல் சரியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

பெரும்பாலான சூழல்களில், தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது  மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியாகச் செயல்படாதது போன்று தெரியலாம்.

348
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்