இலக்கு இல்லாமல் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாமா?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்கள் குறிப்பிட்ட கால அளவில் உங்கள் நிதி இலக்குகளை அடைய உதவுகின்றன. அப்படியானால், உங்கள் மனதில் ஏதேனும் இலக்கு இருந்தால் மட்டும்தான் நீங்கள் அதில் முதலீடு செய்ய வேண்டுமா? அப்படி இல்லையெனில் செய்ய வேண்டாமா? அப்படியில்லை! நிதி இலக்குகள் எதுவும் இல்லை என்றாலும், தனது சேமிப்புகள் பெருக வேண்டும் என்று விரும்பும் யாருமே எப்போதும் முதலீடு செய்ய முடிவெடுக்கலாம். வாழ்வில் எதிர்காலத்தில் நமக்கு சில இலக்குகள் தோன்றலாம், அப்போது இந்த சேமிப்பு நமக்குக் கைகொடுக்கும், நாம் தயாராக இருப்போம்.

போட்டிகள் நடக்கும்போது மட்டுமின்றி, வருடம் முழுதும் பயிற்சி எடுத்துக்கொண்டு இருப்பவர்களே சிறந்த விளையாட்டு வீரர்களாகத் திகழ்கின்றனர். அவர்கள் உலகின் புகழ் வெளிச்சத்திற்கு வருவதற்கு பல காலம் முன்பே அவர்கள் ஆயத்தமாகத் தொடங்கியிருப்பார்கள். அவர்கள் தொடங்கும்போது, உடனடியாக தேசியப் போட்டிகளிலோ சர்வதேசப் போட்டிகளிலோ வெல்ல வேண்டும் என்றெல்லாம் இலக்குகள் எதுவும் அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்குண்டான சந்தர்ப்பம் கிடைக்கும்போது உதாரணமாக, பள்ளியிலோ கல்லூரியிலோ அல்லது தேசிய அல்லது சர்வதேச அளவிலோ தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு கிடைக்கும்போது, அதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு வென்று காட்டுகிறார்கள் என்றால், அது வரையும் அவர்கள் விடாது எடுத்துக்கொண்ட பயிற்சியும், எப்போதும் அவர்கள் தயாராக இருந்ததுமே அதற்குக் காரணம்.

வாழ்வின் நிதி இலக்குகளும் இதேபோல் தான். நீங்கள் பணிபுரியத் தொடங்கும் காலத்தில், உங்களுக்கு மாதச் செலவுகளைச் சமாளிப்பதைத் தவிர பெரிதாக இலக்குகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சம்பாதிக்கத் தொடங்கிய முதலே முதலீடு செய்யத் தொடங்குவது மிக நல்லது. ஏனெனில் வாழ்வில் ஒவ்வொரு கட்டமாக முன்னேறும்போது உங்களுக்காகவோ உங்கள் குடும்பத்திற்காகவோ புதுப்புது இலக்குகள் தோன்றக்கூடும். மனதில் இலக்கு எதுவும் இல்லாமலே நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கினாலும், வாழ்வில் தோன்றும் பல்வேறு நிதித் தேவைகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில் உங்களைத்  தயார்ப்படுத்திக்கொள்வது எப்போதும் நல்லது. அதுமட்டுமின்றி, முதலீடு செய்யத் தொடங்கிவிட்டால் உங்களுக்கே ஓர் ஒழுங்கும் வந்துவிடும். பெருந்தொகை ஒன்றைச் சேமிக்க நீண்ட காலம் ஆகலாம், பொறுமையும் தேவைப்படும். ஆகவே முன்கூட்டியே முதலீடு செய்யத் தொடங்கினால், எந்தவித நிதித் தேவைகளையும் வெற்றிகரமாகச் சமாளிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்