எனது முதலீடுகளை DDT எப்படித் தாக்கத்தை ஏற்படுத்தும்?

என் முதலீடுகளை DDT எவ்வாறு பாதிக்கும்? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஏப்ரல் 2020-க்கு முன்பு, மியூச்சுவல் ஃபண்ட் டிவிடென்ட்களுக்கு முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து செலுத்த வேண்டிய வரி எதுவும் கிடையாது. அதாவது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இருந்து அவர்கள் பெறும் டிவிடென்ட்களுக்காக அவர்கள் வருமானவரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. பகிர்ந்தளிக்க வேண்டிய நிகர உபரித் தொகையைக் கணக்கிட, ஃபண்டின் பகிர்ந்தளிக்கக்கூடிய உபரித் தொகையில் (லாபம்) இருந்து டிவிடென்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரித் (DDT) தொகையை ஃபண்ட் ஹவுஸ் கழித்துவிடும். இந்தத் தொகையானது, அந்த ஃபண்டில் டிவிடென்ட் வருமானம் பெறத் தேர்வுசெய்திருந்த எல்லா மூதலிட்டாளர்களும் வைத்திருக்கும் யூனிட்டுகளின் விகிதத்திற்கு ஏற்பப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இப்போது, மியூச்சுவல் ஃபண்ட்கள் வருமானத்தை வழங்கும்போதே DDT தொகையைக் கழித்துக்கொள்ள வேண்டியதில்லை. மாறாக, முதலீட்டாளர்தான் மியூச்சுவல் ஃபண்ட்களில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு தனது வருமானவரி வரம்புக்கு ஏற்ப வரியைச் செலுத்த வேண்டும். DDT முறை அமலில் இருந்தபோது, டிவிடென்ட் பெறத் தேர்வுசெய்திருந்த எல்லா முதலீட்டாளர்களுக்கும் ஒரே வரி விகிதம் இருந்ததால் பாதிப்பு ஒரே அளவாக இருந்தது. ஆனால் இப்போது டிவிடென்ட் வருமானத்திற்காக செலுத்தும் வரியின் தாக்கமானது ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் வேறுபடும். 20% வருமான வரி வரம்பில் இருப்பவருடன் ஒப்பிடுகையில், 30% வருமான வரி வரம்பில் உள்ள ஒரு முதலீட்டாளர் தனது டிவிடென்டுக்காக அதிக வரி செலுத்த நேரிடும். 

முன்னர், ஃபண்டில் கிடைக்கும் இலாபங்கள் ஃபண்டின் அசெட் வளத்தைப் பெருக்குவதற்காக மீண்டும் முதலீடு செய்யப்படும் என்பதால் குரோத் முறையில் முதலீடு செய்பவர்களுக்கு DDT வரியால் பாதிப்பு இருக்கவில்லை. இதனால், குரோத் முறையில் முதலீடு செய்பவர்கள் ஒரே எண்ணிக்கையிலான யூனிட்டுகளை வைத்திருந்தார்கள், ஆனால் அவர்களது யூனிட்டுகளின் NAV தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் டிவிடென்ட் முறை முதலீட்டாளருக்கோ, டிவிடென்ட் அறிவிக்கப்பட்ட பிறகு NAV மதிப்பு குறைந்தது. 

மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு இருந்த டிவிடென்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரி முறை கைவிடப்பட்டதால், இப்போது குரோத் மற்றும் டிவிடென்ட் என இரண்டு வகை முதலீட்டாளர்களுமே ஒரே விதமான பகிர்ந்தளிக்கக்கூடிய உபரியையே பெறுவார்கள். முன்னர், உபரித் தொகையின் ஒரு பகுதி வருமானமாக வழங்கப்படும் முன்பே மியூச்சுவல் ஃபண்டால் பிடித்துக்கொள்ளப்படும். இதனால் டிவிடென்ட் பெறத் தேர்வு செய்திருந்த முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கின்ற பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர உபரித் தொகையின் அளவு குறைந்தது.

டிவிடென்ட் ரீ-இன்வெஸ்ட்மென்ட் முறையின் மூலம், முதலீட்டாளர்கள் டிவிடென்ட் தொகையை மீண்டும் முதலீடு செய்ய முடியும். ஆனால் எல்லா டிவிடென்ட்களுமே DDT கழிக்கப்பட்ட பிறகே அறிவிக்கப்பட்டன என்பதால், முன்னர் மறுமுதலீடு செய்யப்படும் டிவிடென்ட் தொகையானது குரோத் முறை முதலீட்டாளர்கள் பெற்ற NAV மதிப்பின் அதிகரிப்பைவிடக் குறைவாகவே இருந்தது. இப்போது, குரோத் முதலீடா டிவிடென்ட் பெறும் முதலீடா என்று நீங்கள் தேர்வு செய்வது, நீண்ட கால சொத்து உருவாக்கம், தற்காலத்தில் கூடுதல் வருமானம் தேவையா என்ற இரு விஷயங்களில் உங்கள் தேவை என்ன என்பதைப் பொறுத்தே அமையும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்